இந்த கோவிலில் தேவியை வழிபாடு செய்தால் செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் நீங்கி நிம்மதி தரும்..!

ஈரோடு அருகே உள்ள எட்டிக்குட்டை, குறிஞ்சி மலையில் அமைந்துள்ளது ப்ரத்யங்கிரா தேவி காளிகாம்பாள் தேவி ஆலயம்.
இந்த ஆலயத்தில் உள்ள ப்ரத்யங்கிரா தேவி சுயம்புவாக தோன்றியவர். இந்த சுயம்பு மூர்த்தி காளி ரூபத்தில் கோபத்துடன் காட்சி தருகின்றார். இந்த சுவாமியை வழிபட்டு வர பக்தர்களின் கோரிக்கை நிறைவேறும் என்பதால், தேவியின் புகழ் பரவி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும், மாதந்தோறும் அமாவாசை அன்றும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் நீங்கி நிம்மதி தரும்.கடன் தொல்லை நீங்கும். முன்னோர் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
தங்களின் கோரிக்கை நிறைவேற வேண்டும் என பக்தர்கள், அம்மனுக்கு முன் உல்ல சூலாயுதத்தில் எலுமிச்சை பழத்தைக் குத்தியும், தேங்காய், பூசணி விளக்கேற்றி வழிபடுவதும் உண்டு.இந்த கோவிலில் நடைபெறுகின்ற வரமிளகாய் யாகம் தான் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசை தோறும், நடைபெறக்கூடிய வரமிளகாய் யாகத்திற்காக பக்தர்கள் கொண்டு வரும் வரமிளகாய்களைச் சேமிக்கப்படுகிறது.
மிளகாய் யாகம் தொடங்குவதற்கு முன் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு அனுமதி கேட்கப்படுகிறது. தேவியின் அனுமதி கிடைத்ததும், அவருக்கு முன் உள்ள 10 ஆழ யாக குண்டத்தில், கூடியிருக்கும் 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு முன் இந்த வரமிளகாய் யாகம் நடைபெறுகிறது.