அடடா.. பச்சை வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?!
வாழைப்பழத்தை விரும்பாதவர்களே இல்லை. எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். மேலும் இதில் எக்கச்சக்கமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பொதுவாகவே, வாழைப்பழமானது மஞ்சள், பச்சை, சிவப்பு என்ற நிறத்தில் இருக்கும். பலர் மஞ்சள் மற்றும் சிவப்பு வாழைப்பழத்தை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். சிலர் மட்டுமே பச்சை வாழைப்பழத்தை சாப்பிடுவார்கள்.
உங்கள் தெரியுமா.. மஞ்சள் வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழம் தான் உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும் என்று. இதில் சத்துங்கள் ஏராளமாக உள்ளது. குறிப்பாக இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால், இரத்த சர்க்கரை அளவை சிறப்பாகக் கட்டுப்படுத்த விரும்பும் மக்களுக்கு இது ஒரு நல்ல வழியாகும். மேலும், பச்சை வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் நல்ல மூலமாகும். மற்றும் இதில் குறைந்த சர்க்கரை மற்றும் அதிக மாவுச்சத்து உள்ளது. இதிலிருக்கும் இனிப்பு தனித்துவமானது என்றே சொல்லலாம்.
இப்போது, மஞ்சள் வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் 5 நன்மைகள் பற்றி இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அவற்றை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..
வாழைப்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் 5 நன்மைகள்:
சிறந்த செரிமானம்: பச்சை வாழைப்பழம் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால்,
மலச்சிக்கல், பிற இரைப்பை குடல் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய பெரிதும் உதவுகிறது.
இரத்த சர்க்கரையை குறைக்கும்: இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால், இரத்தம் மற்றும் குடலில் உள்ள குளுக்கோஸை உடைக்கும் நொதிகளைத் தடுப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
எடை இழப்புக்கு: இதில் நார்ச்சத்து மற்றும் எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்து நிறைந்துள்ளது. இவை பசியைத் தணிக்க உதவுகிறது மற்றும் அதிகப்படியான உணவை சாப்பிடுவதை குறைக்கிறது, எனவே எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.
கொலஸ்ட்ராலைக் குறைக்கும்: இதில் இருக்கும் மற்றொரு மூலப்பொருள் பெக்டின். இது எடை அதிகரிப்பதைத் தடுக்க உதவுகிறது. மேலும் இந்த பழத்தில் ரெசிஸ்டண்ட் ஸ்டார்ச் அதிகம் உள்ளது. அவை கொலஸ்ட்ராலைக் குறைத்து, இருதய நோய் அபாயத்தையும் தடுக்கிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது: பச்சை வாழைப்பழத்தில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன. இவை இதய நோய், புற்றுநோய், கண்புரை மற்றும் வயது தொடர்பான பார்வை இழப்பைத் தடுக்க பெரிதும் உதவுகிறது.