WPL – கடைசி 12 பந்தில் சொதப்பிவிட்டோம்.. ஒரு பவுண்டரி அடிக்காமல் தோற்றோம்.. MI கேப்டன் ஹர்மன்பிரீத்

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. டெல்லியில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது.

இதனை அடுத்து களமிறங்கிய மும்பை அணி வெற்றியின் அருகே வந்து ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மும்பை அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுர், கடைசி 12 பந்துகளில் சரியாக விளையாடாததால், நாங்கள் தோற்றுவிட்டோம் என்று கூறினார்.

இது குறித்து பேசிய அவர், எங்களுடைய பந்துவீச்சில் எந்த குறையும் இல்லை. நாங்கள் சிறப்பாக செயல்பட்டு ஆர் சி பி அணியை 140 ரன்கள் சுருட்டினோம். எங்களுடைய பேட்டிங்கும் நன்றாக தான் இருந்தது. ஆனால் கடைசி 12 பந்துகளில் நாங்கள் சொதப்பிவிட்டோம். இறுதி கட்டத்தில் எங்களால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை.இதுதான் டி20 கிரிக்கெட் நமக்கு கற்றுக் கொடுக்கும்.

பாடம் டி20 கிரிக்கெட் உங்களை கடும் நெருக்கடியில் ஆளாக்கும். அந்தக் கட்டத்தில் எப்படி விளையாடுவது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். நான் ஆட்டமிழந்தவுடன் எங்களுடைய வீராங்கனைகள் கொஞ்சம் பதற்றம் அடைந்து விட்டார்கள் என நினைக்கின்றேன். அதுதான் ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது.

சஞ்சனா அதிரடியாக விளையாடக்கூடிய வீராங்கனை. இது போன்ற வீராங்கனைகளை உருவாக்க வேண்டும் என்பதுதான் மகளிர் பிரிமியர் லீக்கின் முக்கிய குறிக்கோள். எங்களுடைய ரசிகர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, இந்த சீசனில் நாங்கள் கடுமையாக முயற்சி செய்தோம்.இந்த சீசன் எங்களுக்கு பல உயர்வையும், சரிவையும் கொடுத்திருக்கிறது.

கடைசி சீசனில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். ஆனால் இம்முறை நாங்கள் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம். அடுத்த சீசனில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன் என ஹர்மன்பிரீத் கூறியுள்ளார். தற்போது மும்பை அணி தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை ஆர் சி பி அணியும் டெல்லி அணியும் இறுதிப் போட்டியில் மோதுகின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *