யமஹா ஆர்15 பைக்லாம் ஓரமா போ.. ஹீரோ ரெடி பண்ணியிருக்கும் இந்த பைக்கை பாத்து எல்லாரும் மிரண்டு போயிட்டாங்க!

ஹீரோ கரிஷ்மா (Hero Karizma)-வின் சிறப்பு பதிப்பாக கரிஷ்மா சிஇ (Karizma CE) இந்தியாவில் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த பைக்கின் சிறப்புகள் குறித்தும், மேலும், இந்த பைக் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இது எத்தனை யூனிட்டுகள் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் முக்கியமான இருசக்கர வாகன (Bike) மாடல்களில் கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் (Karizma XMR) மாடலும் ஒன்றாகும். இந்த பைக் மாடலின் சிறப்பு பதிப்பையே அந்த நிறுவனம் இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது.

ஹீரோ வேர்ல்டு (Hero World) எனும் நிகழ்ச்சியின் வாயிலாகவே இந்த பைக் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. கரிஷ்மா சிஇ எனும் பெயரிலேயே அது வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை உருவாக்கிய பிரிஜ்மோஹன் லால் முன்ஜல் 100ஆம் பிறந்த நாளை முன்னிட்டே இந்த சிறப்பு பதிப்பு உருவாக்கப்பட்டு, தற்போது, வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது.

இந்த பைக் மிகக் குறைவான எண்ணிக்கையில் விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றது. சுமார் 100 யூனிட்டுகள் மட்டுமே அது உற்பத்தி செய்யப்பட இருக்கின்றது. இந்த நூறு யூனிட்டுகளும் வருகின்ற ஜூலை மாதத்தில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த சிறப்பு பதிப்பிற்கும், வழக்கமான பதிப்பு கரிஷ்மாவிற்கும் இடையில் மிகப் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்பது கவனிக்கத்தகுந்தது.

அதேவேளையில், சிறப்பு பதிப்பானது குவார்டர் ஃபேரிங் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இது மட்டுமே இரண்டிற்கும் இடையில் இருக்கும் மிகப் பெரிய வித்தியாசமாக உள்ளது. கிளிப்-ஆன் ஹேண்டில் பார் இதில் வழங்கப்படவில்லை. ஆனால், கரிஷ்மா எக்ஸ்எம்ஆர்-இல் கிளிப்-ஆன் ஹேண்டில் பாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இத்துடன் இந்த சிறப்பு பதிப்பில் பிரிஜ்மோஹனின் முகமும் இடம் பெற்றிருக்கின்றது. இவையே இது ஓர் சிறப்பு பதிப்பு என்பதை பிரதிபலிக்கும் வகையில் இருக்கின்றது. எஞ்சினைப் பொருத்தவரை இந்த பைக்கில் 210 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 25.5 பிஎஸ் மற்றும் 20.4 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

இதே எஞ்சினே வழக்கமான கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் பதிப்பிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக்கில் சிறந்த பிரேக்கிங் வசதிக்காக முன் பக்க வீலில் 300 மில்லி மீட்டர் அளவுள்ள டிஸ்க்கும், பின் பக்க வீலில் 230 மில்லி மீட்டர் அளவுள்ள டிஸ்க்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

சஸ்பென்ஷனுக்காக யுஎஸ்டி ஃபோர்க் மற்ரும் கேஸ் சார்ஜட் மோனோஷாக் ஆகியவை இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், சிறப்பம்சங்கள் விஷயத்திலும் கரிஷ்மா சிஇ மற்றும் கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் ஆகிய இரண்டும் ஒரே மாதிரியாகவே இருக்கும். புரஜெக்டர் ரக எல்இடி ஹெட்லேம்பே கரிஷ்மாவில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இது தானாகவே ஆன் மற்றும் ஆஃப் ஆகும் வசதிக் கொண்டது. இதுதவிர, ஹசார்டு சுவிட்ச், பேக்-லைட் சுவிட்ச் கியர், எல்இடி டெயில்லைட், எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள் மற்றும் புதிய எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த திரை ப்ளூடூத் இணைப்பு வசதி கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த வசதியைக் கொண்டு செல்போனை அந்த திரையுடன் இணைத்துக் கொள்ள முடியும். செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகள் உள்ளிட்டவற்றையும் இந்த திரை வாயிலாகத் தெரிந்துக் கொள்ள முடியும். இதுதவிர, நேவிகேஷன், கியர் பொசிஷன், ட்ரிப் மீட்டர் மற்றும் எரிபொருள் அளவு பற்றிய தகவலையும் இந்த திரை நமக்கு வழங்கும்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *