பொங்கலுக்கு ஆஃபரை அள்ளி தெளித்த யமஹா! கம்மி ரேட்ல வண்டி வாங்க இது நல்ல சான்ஸ்!
யமஹா நிறுவனம் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு தனது வாகனங்களுக்கான சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை இந்த பொங்கல் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. யமஹா வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக இருக்கிறது. இப்படியாக எந்த வாகனங்களுக்கு என்னென்ன தள்ளுபடி என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
பொங்கல் பண்டிகை என்பது மிக முக்கியமான பண்டியாக இருக்கிறது. தமிழர்கள் தமிழர் திருநாளாக கொண்டாடும் இந்த பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஏராளமான மக்கள் புதிய வாகனம் வாங்கும் முடிவை எடுக்க அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. பொங்கல் திருநாளில் புதிய வாகனம் வாங்குவது பலருக்கு விருப்பமான ஒரு விஷயமாக இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் விற்பனையை அதிகரிக்க யமஹா நிறுவனம் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
அதன்படி யமஹா நிறுவனத்தின் 150cc எஃப்இசட் எஸ் ரேஞ்ச் மாடல்கள், எஃப்இசட் 16 மற்றும் 125 சிசி எஃப்ஐ ஹைபிரிட் ஸ்கூட்டர்களுக்கு இது தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. அதன்படி தற்போது 150cc எஃப்இசட் எஸ் எஃப்ஐ வி4, மற்றும் எஃப்இசட் எஸ் எஃப்ஐ வி3 ஆகிய வாகனங்களுக்கு ரூ6000 வரையில் தள்ளுபடிகள் அல்லது ரூபாய் 1999 என்ற முன் பணத்தில் இந்த பைக்கில் எடுத்துச் செல்லும் வாய்ப்பை யமஹா நிறுவனம் வழங்குகிறது.
அதேநேரம் எஃப்இசட் எக்ஸ் வாகனத்தை பொருத்தவரை 0 டவுன் பேமெண்ட் அல்லது ரூ7000 வரையிலான பலன்கள் உடன் இந்த வாகனம் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோக 125சிசியில் எஃப்ஐ ஹைபிரிட் ஸ்கூட்டராக தற்போது யமஹா நிறுவனம் ரே இசட்ஆர் மற்றும் ஃபேஸினோ ஆகிய ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் நிலையில் இந்த ஸ்கூட்டர்களுக்கு ரூ4000 வரை பலன்கள் அல்லது 0 டவுன் பேமென்டில் இந்த ஸ்கூட்டர்களை எடுத்துச் செல்லும் வாய்ப்பை வழங்குகிறது.
தற்போது ஒய் இஸட் எஃப் ஆர் 3, எம்டி-03, ஆர் 15, ஏராக்ஸ் 155 ஆகிய மாடல்களுக்கு எந்த விதமான தள்ளுபடிகளும் அறிவிக்கப்படவில்லை. இந்திய மார்க்கெட்டில் யமஹா நிறுவனம் சமீபத்தில் தான் ஒய் இசட் 3 மற்றும் எம்டி 03 ஆகிய பைக்குகளை அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கில் பலர் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள்.
ஆர் 3 பைக் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய மார்க்கெட்டில் களமிறங்கியுள்ளது. எம்டி 03 பைக் முதன்முறையாக இந்தியாவில் களம் இறங்கி உள்ளதால் இந்த பைக்குகளுக்கு ஏற்கனவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் இதற்கு எந்த விதமான தள்ளுபடிகளும் வழங்கப்படவில்லை.
யமஹா நிறுவனம் இந்த ஆர் 3 மற்றும் எம்டி 03 ஆகிய பைக்குகளை முறையே ரூபாய் 4.65 லட்சம் மற்றும் 4.60 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த விலை என்பது சற்று அதிகமான விலையாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம் இந்த பைக்குகள் எல்லாம் வெளிநாட்டில் முழுமையாக கட்டமைக்கப்பட்டு இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகும் பைக்குகள் ஆகும்.
இந்த பைக்கின் விற்பனை நன்றாக இருந்தால் யமஹா நிறுவனம் உதிரிபாகங்களை மட்டும் இறக்குமதி செய்து இந்தியாவில் இந்த பைக்கை அசெம்பிள் செய்து விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்யும். இப்படி செய்தால் பைக்கின் விலை கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் தற்போது அதிகமான விலை இருப்பதால் இந்த பைக்கை வாங்க பலர் தயக்கம் காட்டி வருவது ஒருபுறம் இருக்கிறது.
இந்த பைக்கிற்கு நேரடி போட்டியாக அப்ரில்லா ஆர்எஸ் 457 என்ற பைக் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. இது வெறும் ரூ 4.1 லட்சம் என்ற விலையில் தான் விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் பேஸிக் பைக்குகளை விரும்பும் மக்களுக்கு இந்த ஆர்3 மற்றும் எம்டி 03 ஆகிய பைக்குகள் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு பைக்கிலும் சிம்பிளான பைக்குகள் தான். இதில் எந்த விதமான எலெக்ட்ரானிக் அம்சங்களும் கிடையாது.
இதில் இருக்கும் ஒரே எலெக்ட்ரானிக் அம்சங்கள் என்றால் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் மட்டும் தான். இந்த பைக்கில் ஸ்லிப்பர் கிளட்ச் சிஸ்டம் கூட கிடையாது. இதனால் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பைக்குகள் எப்படி இருக்குமோ அதே போன்ற தோற்றம், அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது.