என்னுடைய வாழ்க்கையே நீங்க தான்.. கனவனை பிரிந்த சானியா மிர்சா உருக்கம்.. சரி, அந்த பெண் பிள்ளை யார்?
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் ஜோடி அண்மையில் பிரிந்தது. அது மட்டுமல்லாமல் சனா ஜாவித் என்ற ஒரு பெண்ணை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.
இதனால் சானியா மிர்சா தற்போது கணவனை பிரிந்த நிலையில் வாழ்ந்து வருகிறார். இந்திய டென்னிஸ் வரலாற்றிலேயே மிக உச்சத்தை தொட்டவர் தான் சானியா மிர்சா. இந்தியர்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை கலப்பு இரட்டையர் மற்றும் இரட்டைகள் பிரிவு என மொத்தம் ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வாங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் சானியா மிர்சா அடுத்தது என்ன செய்யப் போகிறார் என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. சிலர் சானியா மிர்சாவையும் முகமது சமியையும் திருமணம் செய்து கொண்டதாக போலியாக புகைப்படத்தை எல்லாம் பதிவிட்டனர். இந்த நிலையில் சானியா மிர்சா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
தன்னுடைய மகனையும் இன்னொரு பெண் குழந்தையும் சானியா மிர்சா கட்டி அணைத்து நீங்கள் தான் இனி என்னுடைய வாழ்க்கையில் உயிர் நாடி என்று உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார். கணவன் பிரிந்த நிலையில் இனி குழந்தைகளுக்காக வாழப் போகிறார் என்ற நிலையை சானியா மிர்சா எடுத்து விட்டதாக இதன் மூலம் தெரிகிறது. பலரும் சானியா மிர்சாவுக்கு ஆறுதலாக கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் சிலர் இதிலிருந்து மீண்டு உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் என்று வாழ்த்தும் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் சானியா மிர்ஷாவுக்கும் சோயிப் மாலிக்கும் ஒரே ஒரு மகன் மட்டும் தான் இருக்கிறார். இந்த நிலையில் அந்தப் பெண் குழந்தை யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சானியா மிர்சா ஏன் அந்த பெண் குழந்தையை கட்டி அணைத்து இவ்வாறு உருக்கமாக பதிவிட்டிருக்கிறார் என்றும் கேள்வி எழுந்து வருகிறது.
இந்த நிலையில் அது சானியா மிர்சாவின் தங்கை மகளான துவா என்பவரை தான் அவர் கட்டி அணைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தங்கை மகளாக துவா இருந்தாலும் அவரை சானியா மிர்சாதான் வளர்த்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. சானியா மிர்சாவின் பல நிகழ்ச்சிகளில் அந்த பெண் குழந்தை துவாவும் பங்கேற்று இருப்பது தெரியவந்துள்ளது.