அடுத்த கேப்டன்னு சொல்றாங்க.. இப்படி சின்ன பசங்களோட கோலி குண்டு விளையாடுறீங்க.. ரிஷப் பண்ட் சேட்டை!

டெல்லி : டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சிறுவர்களுடன் கோலி குண்டு விளையாடும் வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய அணியின் ரிஷப் பண்ட் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் அவரின் கார் மொத்தமாக தீப்பிடிக்க, பின்னர் சாலையில் சென்ற மனிதர்களால் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டார். இதன்பின் அவருக்கு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதன்பின் ஓராண்டுக்கும் மேலாக ரிஷப் பண்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கிறார். இதனிடையே முழுமையாக குணமடைந்த அவர், என்சிஏவில் பயிற்சியை தொடங்கினார். குறிப்பாக அவரின் கால்களில் ஏற்பட்ட காயத்திற்கு பின், அதிகளவிலான பயிற்சியில் ஈடுபடாமல் கொஞ்சம் நிதானமாக பயிற்சியாளர்கள் அவருக்கு பயிற்சி அளித்தனர்.

இதன்பின் வீடு, என்சிஏ என்று பயிற்சியை மேற்கொண்ட ரிஷப் பண்ட், டிசம்பர் மாதத்தில் தோனியுடன் விடுமுறையை கொண்டாடினார். இந்த நிலையில் ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து டெல்லி அணியின் இயக்குநர் சவுரவ் கங்குலி பேசுகையில், மார்ச் 5ஆம் தேதி ரிஷப் பண்ட் என்சிஏவில் இருந்து உடற்தகுதி சான்றிதழை பெறுவார் என்று தெரிவித்தார்.

இதனால் ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் கட்டாயம் விளையாடுவார் என்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், டெல்லி அணி நிர்வாகம் அவரை முதல் 7 போட்டிகளில் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாக மட்டுமே களமிறக்க முடிவு செய்துள்ளது. அதன்பின் அவரின் உடல்நிலை எப்படி ஒத்துழைக்கிறது என்பதை வைத்தே, அடுத்த 7 போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாட வைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். டெல்லியில் உள்ள ரிஷப் பண்ட் வீட்டிற்கு அருகில் சில சிறுவர்கள் கோலி குண்டு விளையாடியதை பார்த்த அவர், குட்டி பசங்களுடன் இணைந்து கோலி குண்டு விளையாட தொடங்கினார். இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டனாக ரிஷப் பண்ட் வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், எந்தவித தயக்கமும் இல்லாமல் கோலி குண்டு விளையாடுவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *