நீ தான்பா சரியான ஆளு! பயோபிக் எடுக்க ‘ஆக்சன்’ இயக்குனரை தேர்வு செய்த இளையராஜா?
அதனைத் தொடர்ந்து சில காரணங்களால் படத்தில் இருந்து பால்கி தூக்கப்பட்டு அவருக்கு பதிலாக இரண்டு தமிழ் இயக்குனர்களான அருள் மாதேஸ்வரன் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது .
அது மட்டுமின்றி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை தனுஷை தயாரித்து நடிப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது தன்னுடைய பயோபிக் படத்தை எடுக்க இயக்குனரை தேர்வு செய்துவிட்டாராம் இளையராஜா. அதன்படி அருண் மாதேஸ்வரன் தான் கிட்டத்தட்ட இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை இயக்க உள்ளாராம்.
எனவே தன்னுடைய படத்தை இயக்க வேண்டும் என்றால் தன்னிடம் சில நாட்கள் இருந்து தன்னைப் பற்றிய வரலாற்று கதையை மெல்ல மெல்ல கூறுவது தான் சரியாக இருக்கும் என்று இளையராஜா அருண் மாதேஸ்வரனை நேரில் அழைத்து பக்கத்தில் வைத்திருக்கிறாராம்.