170 கோடிக்கு பங்களா வாங்கினாரே சுனில்.. முகேஷ் அம்பானி மொபைல் பிஸினசின் முதுகெலும்பு!
வாடிக்கையாளர்கள் இப்போது ஸ்மார்ட்போன்களை விரும்பி வாங்குவதால் முந்தைய பட்டன் டைப் பீச்சர் போன்களுக்கு மார்க்கெட் இல்லாமல் போய்விட்டது. ஆனால் அந்த போன்களுக்கு கூட 300 சதவீத டிமாண்டு வரும் வகையில், ஜூலை- செப்டம்பர் காலாண்டு காலத்தில், ஜியோ பாரத் போன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. பில்லியனரான, சுனில் வச்சானியின் டிக்ஸன் டெக்னாலஜிஸ் 2024 மார்ச்சுக்குள் ஜியோ பாரத் போன்களை தயாரிப்பதன் மூலம் ரூ.1600 கோடி முதல் ரூ.1800 கோடி வரை வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை
எதிர்பார்க்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான ஜியோவிடமிருந்து இரண்டு கோடி ஜியோ பாரத் போன்களை தயாரிப்பதற்கான ஆர்டரை டிக்ஸன் பெற்றுள்ளது. தனது தந்தையிடமிருந்து ரூ.20 லட்சம் கடனாகப் பெற்று ஒரு டெலிவிஷன் செட் தயாரிப்புத் தொழிலை சுனில் வச்சானி 1993 ஆம் ஆண்டில் தொடங்கினார். தில்லியில் ஒரு வாடகைக் கட்டடத்தில் இருந்து 14.1 இஞ்ச் டிவிக்களை அவர் தயாரித்து வந்தார். இன்றைக்கு அவரது டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.39,000 கோடிக்கும் மேல் ஆகும். போர்ப்ஸ் மதிப்பின்படி சுனில் வச்சானியின் நிகர சொத்து மதிப்பு 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.இந்திய மதிப்பில் ரூ.13,300
கோடி. அம்பானியின் ஜியோ தவிர உலகின் பெரும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களான சாம்சங், ஜியோமி, பானாசோனிக் போன்றவையும் டிக்ஸன் டெக்னாலஜிஸின் வாடிக்கையாளர்களாக உள்ளனர் . 2017 ஆம் ஆண்டில் இருந்து இந்த நிறுவனத்தின் பங்குகள் விலை கணிசமாக அதிகரித்து வருகிறது. வருடத்துக்கு 5 கோடி ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் திறனை சுனில் வச்சானியின் நிறுவனம் கொண்டுள்ளது. நிறுவனத்தின் பங்கில் மூன்றில் ஒரு மடங்கை 52 வயதான வச்சானி வைத்துள்ளார். அண்மையில் டெல்லியில் ஒரு சொகுசு பங்களாவை அவர் ரூ.170 கோடிக்கு வாங்கினார்.