ஏப்ரல் 1 முதல் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்..!
கர்நாடகா மாநில ரேஷன் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநிலத்தில் சில மாதங்களாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாமல் இருந்தது. அதனால் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்க முடியாமலும்,அரசின் சலுகைகள் கிடைக்காமல் பலர் தவித்தனர்.
இந்நிலையில் புதிய ரேஷன் கார்டு குறித்து உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் கே.எச்.முனியப்பா முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது அரசு ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய பிபிஎல் மற்றும் ஏபிஎல் கார்டுகளை வழங்கத் தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார். விண்ணப்பங்கள் பெறப்பட்டு விரைவில் மக்களுக்கு ரேஷன் கார்டு விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.