இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா… தமிழக அரசு அறிவிப்பு

மிழக அரசின் சார்பில், தமிழகத்தில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளுக்கும் மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்ல உள்ளதாகவும், இதற்காக இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 2,646 அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கொடை வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க விழா இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிலையில், இந்த விழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு இத்திட்டத்தினை தொடங்கி வைத்து 10 பேருக்கு தலா ரூ1000 க்கான காசோலைகளை வழங்கினார்.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விடுத்த செய்திக்குறிப்பில் ‘முருக பெருமான் அருள்பாலிக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை திருத்தலங்களுக்கு மூத்த குடிமக்கள், ஒரே தடவையில் சென்று தரிசிக்க சிரமப்படுகின்றனர். இவர்களின் குறையை போக்கும் வகையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் கட்டணம் இல்லாமல் அரசு சார்பில் மூத்த குடிமக்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். 6 கோயில்களுக்கும் கட்டணம் இல்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட 200 பேர் என ஆண்டுக்கு 5 முறை அழைத்து செல்லப்படுவர்.

வருடத்திற்கு 1,000 பக்தர்கள் என்ற கணக்கில் முதியவர்களை அழைத்துச்சென்று தரிசனம் செய்து வைக்கப்படும். இந்த முயற்சி இந்து சமய அறநிலையத் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக அறுபடை வீடு ஆன்மிக சுற்றுப்பயணம் ஜனவரி 28ம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதி உடைய 200 விண்ணப்பதாரர்கள் முதற்கட்டமாக ஆன்மிக சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். மீதமுள்ள தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் அடுத்தடுத்த ஆன்மிக பயணங்களில் அழைத்துச் செல்லப்படுவர் என அமைச்சர் கூறியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *