மாதம் ரூ.2000 முதலீடு செய்தால் கோடீஸ்வரர் ஆகலாம்.. இந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி தெரியுமா?
ஒரு சிறந்த வாழ்க்கையை வாழவும், சரியான முறையில் பணத்தை முதலீடு செய்து கோடீஸ்வரராக மாற வேண்டும் என்பதே பலரின் விரும்பமாக உள்ளது. ஆனால் கோடீஸ்வரராக மாற, முதலீட்டுத் திட்டங்களுக்கு எதைத் தேர்ந்தெடுப்பது என்று பலருக்கும் தெரியாது. சந்தையில் பல திட்டங்கள் மற்றும் முதலீட்டு உத்திகள் உள்ளன, இதில் சரியான மூதலீட்டு திட்டத்தை தேர்வு செய்து, சரியான முறையில் திட்டமிட்டு முதலீடு செய்தால் யார் வேண்டுமானாலும் கோடீஸ்வரர் ஆகலாம். அதன்படி எந்த திட்டத்தில் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அந்த வகையில் மியூச்சுவல் ஃபண்டில் 555 ஃபார்முலா என்பது நல்ல முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். 555 ஃபார்முலாவில் நீங்கள் 25 வயதில் மியூச்சுவல் ஃபண்டில் உங்கள் முதலீட்டுப் பயணத்தைத் தொடங்க வேண்டும். அடுத்த 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதுடன், ஒவ்வொரு ஆண்டும் உங்கள் முதலீட்டுப் பணத்தை 5 சதவிகிதம் உயர்த்தினால், 55 வயதில் ஓய்வு பெறுவீர்கள். 555 ஃபார்முலா என்பது 30 ஆண்டுகளில் ஆண்டுக்கு 5 சதவீதம் முதலீட்டை வளர்ப்பதற்கான திட்டத்தைக் குறிக்கிறது.
இப்போது, 555 ஃபார்முலாவைப் பயன்படுத்தி மாதம் ரூ.2,000 முதலீடு செய்வதன் மூலம் கோடீஸ்வரர் ஆகுவது எப்படி என்று பார்க்கலாம். ஒருவர் தனது 25 வயதில், மியூச்சுவல் ஃபண்டுகளில் SIP முறையில் ரூ. 2,000 உடன் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், உங்கள் முதலீட்டுப் பணத்தை 5 சதவீதம் உயர்த்தி, அடுத்த 30 ஆண்டுகளுக்குப் பராமரிக்க வேண்டும்.
30 ஆண்டுகளில் சராசரியாக 12 சதவீதம் வருமானம் ஈட்டினால், உங்களின் மொத்த முதலீடு ரூ.15.95 லட்சமாக இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் மூலதன ஆதாயம் ரூ. 89.52 லட்சமாக இருக்கும், மேலும் 30 ஆண்டுகளில் உங்கள் மொத்த வருமானம் ரூ.1.05 கோடியாக இருக்கும். நீங்கள் 55 வயதில் ஓய்வு பெற்றாலும், ஓய்வூதிய சேமிப்பில் 1.05 கோடி ரூபாய் இருக்கும்.
மாதம் 5,000 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்?
ரூ.5,000 மாதாந்திர முதலீட்டில் உங்கள் முதலீட்டுப் பயணத்தைத் தொடங்கி, உங்கள் மாதாந்திர SIP-ஐ 5 சதவீதம் அதிகரித்தால், 30 ஆண்டுகளில் 12 சதவீத லாபத்தில் உங்கள் மொத்த முதலீடு ரூ.39.86 லட்சமாக இருக்கும், மதிப்பிடப்பட்ட மூலதன லாபம் ரூ.2.24 கோடியாக இருக்கும். மற்றும் 55 வயதில் மதிப்பிடப்பட்ட வருமானம் ரூ.2.64 கோடியாக இருக்கும்.
SIP என்றால் என்ன?
SIP என்பது சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான், மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும் வழிமுறை ஆகும். மியூச்சுவல் ஃபண்டில் மொத்தமாக முதலீடு செய்வதற்கு பதில் தவணை முறையில் முதலீடு செய்யும் முறையே எஸ் ஐ பி என்று அழைக்கப்படுகிறது.