குஜராத்தில் இங்கு மட்டும் ‘மது’ அருந்தலாம்.! அரசு அறிவிப்பு.. காங்கிரஸ் எம்பி கடும் விமர்சனம்.!
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. அங்கு, எங்கும் மது அருந்த, விற்க அனுமதி இல்லை.
இப்படியான சூழலில், கடந்த வெள்ளிக்கிழமை காந்திநகர் மாவட்டத்தில் உள்ள குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டியில் எனும் கிஃப்ட் சிட்டி (Gift City) அமைந்துள்ளது. அந்த இடத்திற்கு வரும் பொதுமக்கள் ஒயின் உள்ளிட்ட குறிப்பிட்ட வகை மதுபானங்களை அருந்த அனுமதி வழங்ப்பட்டுள்ளது.
இந்த மது அருந்தும் சேவையானது கிஃப்ட் சிட்டியில் (Gift City) குறிப்பிட்ட ஹோட்டல்கள் மற்றும் கிளப்களுக்கு மட்டும் விற்பனை செய்ய குஜராத் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த கிப்ட் சிட்டியில் மது அருந்த மட்டுமே முடியும். மது பாட்டிலை வாங்கி செல்ல முடியாது.
ગુજરાતમાં પાછલા બારણે દારૂ બંધી દૂર કરવાનો નિર્ણય ઘાતક અને દુઃખદ છે . ગિફ્ટ સિટી ગાંધીનગરમાં દારૂબંધી હટાવવાના નિર્ણય પર મારી પ્રતિક્રિયા 👇. pic.twitter.com/da1Cs2ZUZv
— Shaktisinh Gohil MP (@shaktisinhgohil) December 22, 2023
தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வாயிலாக பதிவிடுகையில், காந்திநகரின் கிப்ட் நகரில் மதுவிலக்கை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநில அரசின் இந்த அனுமதி உத்தரவு மக்கள் மனதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது மக்கள் மதுவை அங்கு சென்று உட்கொள்வார்கள். பின்னர் அந்த நடவடிக்கை குஜராத்தை எதிர்மறையாக பாதிக்கும். இதனால் அரசுக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை என்றும் காங்கிரஸ் எம்.பி அந்த வீடியோவில் கூறினார்.