40 ரூபாயில் ரூ.2 லட்சத்திற்கான காப்பீடு பெறலாம்..!
பிரதமர் நரேந்திர மோடி ஏழை-எளிய மக்களுக்கு காப்பீடு கிடைக்கும் வகையில், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா (Pradhan Mantri Jeevan Jyoti Bima என்ற திட்டத்தை அறிமுகம் படுத்தினார். அதன்படி இந்த திட்டத்தின் மூலம் மக்கள் நிதிப் பாதுகாப்பை பெற முடியும். இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில், பாலிசிதாரர் மரணம் அடைந்தால், நாமினி அல்லது குடும்பத்தை சேர்ந்தவருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். எனவே இப்போது இந்த திட்டத்தின் பலன் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
இது டெர்ம் இன்சூரன்ஸ் திட்டமாகும் :
Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana – PMJJBY என்பது ஒரு காலக் காப்பீட்டுத் திட்டமாகும். பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா விபத்து மரணம் அல்லது மொத்த நிரந்தர ஊனத்திற்கு ரூ.2 லட்சம் காப்பீடு தொகையையும் மற்றும் நிரந்தர பகுதி ஊனத்திற்கு ரூ. 1 லட்சத்தையும் வழங்குகிறது. குறைவான பிரிமீயம் மட்டுமே செலுத்தி அதிக பலன்களை பெறுவது இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சம் ஆகும்.
நீங்கள் ஆண்டு 436 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு மாதமும் ரூ.40க்கும் குறைவாக ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும். இந்த திட்டத்தில் சேர 18 வயது முதல் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆண்டுதோறும் இதை புதுப்பிக்க வேண்டும். இந்த பாலிசியை வங்கிக் கிளை அல்லது தபால் அலுவலகத்தில் பெறலாம். இந்த காப்பீடு பெறுவதற்கு எந்த வித மருத்துவ பரிசோதனையும் செய்ய வேண்டியதில்லை.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா திட்டத்தில் ஆட்டோ ரின்யூவல் வசதியும் உள்ளது. அதாவது, காப்பீட்டு காலம் முடிந்தவுடன் அடுத்த ஆண்டுக்கான பிரீமியம் தானாகவே கணக்கிலிருந்து கழிக்கப்படும். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மே 25 முதல் மே 31க்குள் ரூ.436 கணக்கிலிருந்து தானாகவே கழிக்கப்படும். பாலிசி எடுத்த 45 நாட்களுக்குப் பின்பு காப்பீட்டின் பலன் கிடைக்கும். எனினும் விபத்தில் இறந்துவிட்டால் 45 நாட்கள் என்ற நிபந்தனை செல்லுபடியாகாது.