கருவளையம் நிரந்தரமாக நீங்க ஒரு சில Face Scrub: எளிய முறையில் தயாரிக்கலாம்
கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
இதற்கு முக்கிய காரணம், கணினி மற்றும் செல்போனை அதிகளவு பயன்படுத்துவதுதான்.
முகத்தின் அழகினை கெடுக்கும் இந்த கருவளையங்கள் மற்றும் கரும்புள்ளிகள் நிறைந்தரமாக நீங்க ஒரு சில Face scrub பற்றி பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
ஓட்ஸ்- 1 ஸ்பூன்
பால்- 1 ஸ்பூன்
தேன்- 1 ஸ்பூன்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ், தேன் மற்றும் பால் சேர்த்து, நன்கு கலக்கவும். இந்த பேஸ்பேக்கை முகம் மற்றும் கழுத்தில் மெதுவாக தடவி, விரல் நுனியில் 30 வினாடிகள் மசாஜ் செய்யவும். 10 நிமிடம் அப்படியே விட்டு பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும்.
2. தேவையான பொருட்கள்
காபி- 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
செய்முறை
காபி பொடி மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து, நன்கு கலக்கவும். இந்த ஸ்க்ரப்பை 15 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும். பிறகு தண்ணீரில் கழுவவும்.
3. தேவையான பொருட்கள்
உளுத்தம்பருப்பு அல்லது பீசன்- 1 ஸ்பூன்
மஞ்சள்- 1 ஸ்பூன்
தயிர்- 1 ஸ்பூன்
செய்முறை
ஒரு பௌலில் உளுத்தம்பருப்பு அல்லது பீசன், மஞ்சள் மற்றும் அரை தேக்கரண்டி தயிர் எடுத்துக் கொள்ளவும். இவ்வனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். இந்த ஸ்க்ரப்பை 40 விநாடிகள் மசாஜ் செய்து, தண்ணீரில் கழுவ வேண்டும்.
4. தேவையான பொருட்கள்
வாழைப்பழம்- 1
ஓட்ஸ்- 1 ஸ்பூன்
செய்முறை
பழுத்த வாழைப்பழத்தை எடுத்து மசிக்க வேண்டும். இதில் அரைத்த ஓட்ஸ் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் 30 விநாடிகளுக்கு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின் கழுவ வேண்டும்.
5. தேவையான பொருட்கள்
தேன்- 1 ஸ்பூன்
பால்- 1 ஸ்பூன்
சர்க்கரை- 1 ஸ்பூன்
செய்முறை
ஒரு பௌலில் தேன், பால் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 15 நிமிடம் அப்படியே விட்டு பிறகு கழுவிக்கொள்ளலாம்.
6. தேவையான பொருட்கள்
ஸ்ட்ராபெரி- 5
தயிர்- 2 ஸ்பூன்
செய்முறை
ஒரு பௌலில் ஸ்ட்ராபெரியை மசித்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின் முகத்தில் மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவுவதற்கு முன், 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.