வெறும் 15 நிமிடத்தில் இந்த ஸ்வீட் செய்யலாம்: நாவில் வைத்தால் கரையும்

ஒரு முறை ராகி பர்ஃபி, இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
1 கப் தண்ணீர்
முக்கால் கப் வெல்லம்
3அரை கப் ராகி மாவு
4 ஸ்பூன் நெய்
ஏலக்காய் தூள் கால் ஸ்பூன்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் தண்ணீர், வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் ரவையை சேர்க்கவும். தொடர்ந்து கிளரவும். தொடர்ந்து அதில் ராகி மாவை சேர்க்கவும். தொடர்ந்து அதில் வெல்ல பாகை சேர்த்து கிளரவும். தொடர்ந்து அதில் நெய் சேர்த்துகொள்ளவும். ராகி கலவையை ஒட்டாமல் வரும் வரை கிளரவும். தொடர்ந்து இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி, ப்ரிஜில் வைக்கவும். 1 மணி நேரம் கழித்து, ஒரு பாத்திரத்தில் மாற்றி, அதை சிறு துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.