கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த காரை சொந்தமாக்க முடியாது! ஏன் தெரியுமா?
அமெரிக்காவின் முதல் பிளக் இன் ஹைட்ரஜன் ஃப்யூயல் செல் கார் அறிமுகமாக உள்ளது. ஹோண்டா நிறுவனம் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் சேர்ந்து இந்த காரை தயாரிக்கிறது. இந்த காருக்கு பெட்ரோல் போடவும் தேவையில்லை தானாக ஹைட்ரஜன் இயங்கும் காராக இது உருவாகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
அமெரிக்காவில் முதன்முறையாக ஹோண்டா நிறுவனம் தனது சிஆர்வி என்ற காரை ஹைட்ரஜன் ஃப்யூரியல் செல் காராக அறிமுகப்படுத்தப் போகிறது. இது அமெரிக்காவின் முதல் பிளக் இன் ஹைட்ரஜன் எலெக்ட்ரிக் காராக அறிமுகமாகிறது. இந்த காரை ஹோண்டா மற்றும் ஜென்ரல் மோட்டார்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் சேர்ந்து தயாரிக்கிறது.
இந்த காரை ஒரு தடவை முழுவதுமாக செட் செய்தால் 434 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போக கூடுதலாக காரில் உள்ள பேட்டரி மூலம் 47 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரை தற்போது அமெரிக்காவில் தயாரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக இந்த கார் அமெரிக்காவில் மட்டுமே தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.
இந்த காரை நீங்கள் அமெரிக்காவில் இருந்தாலும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாலும் சொந்தமாக வாங்க முடியாது. இதற்கு முக்கியமான காரணம் இந்த காரை அந்நிறுவனம் லீசுக்கு மட்டுமே விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அதாவது காரை வாங்க நினைப்பவர்கள் குறிப்பிட்ட ஒரு தொகையை மாதம் செலுத்தி காரை சொந்தமாக பயன்படுத்த முடியும். ஆனால் காருக்கான முழு உரிமமும் வாகன தயாரிக்கும் நிறுவனத்தில் மட்டுமே இருக்கும்.
ஹோண்டா நிறுவனம் இந்த காரை ஓஹியோ மாகாணத்தில் உள்ள தனது ஆலையில் வைத்து தயாரிக்க உள்ளது. இந்த சிஆர்பி காரில் ஹைட்ரஜன் ஃப்யூயல் செல்லில் இயங்கும் போது சில பிரச்சினைகள் ஏற்படுவதால் இதன் வெளிப்புறத் தோற்றம் மற்றும் உட்புற கட்டமைப்பில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். முக்கியமாக இதன் ஏ பில்லர் மற்றும் லிப்ட் கேட் ஆகிய பகுதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என தெரிய வருகிறது.
இந்த காரில் உள்ள அம்சங்களை பொறுத்தவரை இந்த இதில் 18 இன்ச் கொண்ட 10 ஸ்போக் ப்ளாக் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த காரின் முன் பகுதியில் தாழ்வான கிரில் டிசைன் வழங்கப்பட்டுள்ளது. இது காருக்கான அக்ரிஷிவ் லுக்கே கொடுக்கிறது. நாம் முன்பே சொன்னத படி இந்த கார் செல்லில் இயங்கக்கூடிய காராக இருக்கிறது. இது மட்டுமல்ல இது ஒரு டூரிங் ரக காராகவும் உள்ளது.
இந்த காரின் உட்புறம் 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடைமென்ட் சிஸ்டம் மற்றும் 10.2 இன்ச் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கண்ட்ரோல் ஆகியன உள்ளன மேலும் இந்த காரில் வயர்லெஸ் ஆப்பிள் கார்பளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வயர்லெஸ் போன் சார்ஜிங் ஆப்ஷன்களும் உள்ளன. மிக முக்கியமாக இந்த காரில் உள்ள சவுண்ட் சிஸ்டத்தை பொருத்தவரை 12 ஆடியோ சிஸ்டம் இருக்கிறது.
இதுபோக இந்த காரில் பவர் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க சீட்டுகள் டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், பவ்டு டெயில் கேட், பார்க்கிங் சென்சார், ஃபர்ஸ்ட் டைம் டேபிள் மெட்டீரியல், பயோ பெஸ்ட் லெதர் சீட் ஆகியன பொருத்தப்பட்டுள்ளன. நாம் முன்னரே சொன்ன படி இந்த கார் இரண்டாம் தலைமுறை ஃப்யூயல் செல் தொழில்நுட்பத்தை கொண்ட காராக இருக்கிறது.
இந்த கார் 17.7 கிலோவாட்ஹவர் பேட்டரி பொருத்தப்பட்ட காராக இருக்கிறது. இந்த பேட்டரி சிங்கிள் மோட்டார் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. 174 பிஎச்பி பவரையும் 310 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதில் ஃப்யூயல் செல் மட்டும் 92.2 கிலோ வாட் ஹவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் மொத்தம் நார்மல், எக்கோ, ஸ்போர்ட், ஸ்னோ என்று நான்கு விதமான டிரைவ் மோடுகள் உள்ளன.