கோடிகளை சம்பாதிக்க ஐஐடி, ஐஐஎம் தேவையில்லை.. கார்பரேட் உலகில் மாஸ்காட்டும் வினிதா குப்தா..!!

டந்த சில ஆண்டுகளில் எத்தனையோ கோடீஸ்வர பெண்மணிகளை இந்தியா பார்த்து விட்டது. பல இந்தியப் பெண்கள் மல்டி பில்லியன் டாலர்கள் குளோபல் கார்ப்பொரேஷன்களை இன்றைக்கு நடத்தி வருகிறார்கள்.
இதில் மிக முக்கியமானவர் லூபின் பார்மாவின் வினிதா குப்தா இந்தியாவின் பணக்கார பெண் சிஇஓக்களில் ஒருவர் ஆவார்.இரண்டாம் தலைமுறை பெண் தொழில் அதிபரான வினிதா குப்தா, ஹெச்சிஎல்லின் ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா, நைக்காவின் ஃபல்குனி நாயர், பிட்காயினின் கிரண் மஜும்தார் போன்ற டாப் நிறுவனங்களின் சிஇஓ-க்களில் ஒருவர். இந்தியாவின் ஹெல்த்கேர் துறையில் வினிதா குப்தா சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளார். 2013 ஆம் ஆண்டில் இருந்து உலகளவில் மிகப் பெரிய பார்மா நிறுவனமாக அவரது லூபின் இருந்து வருகிறது.அந்த நிறுவனம் அவரது தந்தை தேஷ் பந்து குப்தாவால் 1968 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.பிர்லா இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி அண்டு சயின்ஸில் அசிஸ்டென்ட் புரொபஸராக இருந்த தேஷ் பந்து குப்தா லூபின் நிறுவனத்தைத் தொடங்கி காச நோய்க்கான மருந்துகளை தயாரித்தார்.லூபின் பார்மாவின் சிஇஓவாக வினிதா குப்தா உள்ளார். அதன் நிர்வாக இயக்குநராக அவரது சகோதரர் நிதேஷ் குப்தா இருக்கிறார். வினிதாவின் தாயார் மஞ்சு குப்தா நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.பில்லியனர் சிஇஓவாக உள்ள வினிதா குப்தா ஒரு ஐஐடியிலோ அல்லது ஐஐஎம்மிலோ படித்தவர் அல்ல. மும்பை பல்கலைக்கழகத்தில் பார்மஸியில் பட்டப்படிப்பை முடித்தார்.அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் கெல்லாக் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட்டில் எம்பிஏ பட்டத்தை முடித்தார்.1992 ஆம் ஆண்டில் அவர் லூபின் பார்மாவின் அமெரிக்க பிசினஸ் டெவலப்மெண்ட் இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்கினார்.தனது குடும்ப நிறுவனத்தை ஒரு சர்வதேச சாதனை நிறுவனமாக வினிதா உயர்த்தினார். அவரது திறமையான உத்திகள் நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின.லூபின் பார்மாவின் அமெரிக்க துணை நிறுவனத்தின் தலைவராகவும் வினிதா உள்ளார். வினிதா குப்தாவின் லூபின் பார்மாவின் சந்தை மதிப்பு ரூ.63,750 கோடியாகும். லூபின் பார்மாவின் ஆண்டு அறிக்கையின்படி வினிதாவின் 2022- 23 நிதியாண்டின் சம்பளம் ரூ.10.9 கோடி ஆகும்.அண்மையில் வெளியான ஹுருண் பணக்கார பெண்கள் பட்டியலில் வினிதா குப்தா இடம்பெற்றுள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 2022 ஆம் ஆண்டில் ரூ.3,640 ஆகும். போர்ப்ஸ் கணிப்பின்படி அவரது குடும்ப சொத்து மதிப்பு ரூ.24,200 கோடி ஆகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *