“உன் அப்பன்” வீட்டு வண்டியா.. நேற்று ஆவேசமாக பேசிய ஊட்டி பஸ் டிரைவர் பன்னீர்.. இன்று என்னாச்சு பாருங்க

நீலகிரி மாவட்டம் அய்யன்கொல்லியில் “உன் அப்பன்” வீட்டு வண்டியா என கேட்ட அரசு பேருந்து ஓட்டுனர் பன்னீர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெண் பயணியிடம் தரக்குறைவாக பேசியது குறித்து சமூக ஊடகங்களில் வீடியோ பரவிய நிலையில் அரசு பேருந்து ஓட்டுநர் பன்னீர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

அரசு பேருந்துகளில் பணிபுரியும் டிரைவர்கள், கண்டக்டர்கள் கவனமாக இருக்க வேண்டும். பயணிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று போக்குவரத்து கழகம் அடிக்கடி அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும் சிலர் மன அழுத்ததிலோ அல்லது அலட்சியத்துடனோ பயணிகளிடம் வார்த்தைகளை விட்டுவிடுகிறார்கள். அப்படி வார்த்தையை விடும் டிரைவர்கள் அல்லது கண்டக்டர்கள் வீடியோவில் சிக்கினால் கண்டிப்பாக பணியிடை நீக்கம் உள்ளிட்ட தண்டனைக்கு உள்ளாகிறார்கள்.

பயணிகள் சில நேரங்களில் கோபப்படுத்தும் போது,உணர்ச்சி வேகத்திலோ அல்லது ஆவேசத்திலோ கோபப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசும் போது, பாதிக்கப்படுவது பயணிகள் மட்டுமல்ல.. நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தான்.. சமூக ஊடகங்களில் அவர்களின் கோபம் வைரலாகி அவர்களை ஊரே திட்டுவதுடன், தண்டனையாக சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்டால் அவர்கள் ஊதியம் பாதிக்கப்படும். அவர்கள் குடும்பத்தையும் பாதிக்கிறது. ஒரு சிறிய கோபம், உணர்ச்சி வேகத்தில் தவறுதலாக பேசுவது இந்த அளவிற்கு போக்குவரத்து ஊழியர்களை பாதிக்கிறது. அதற்கு உதாரணம் தான் நீலகிரி மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம்..

தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் சுற்றுலாவிற்கு பிரபலம் ஆனது. அங்கு சுற்றுலவை போல் தேயிலை தயாரிப்பும் பிரதானமாக உள்ளது. அங்கு தேயிலை தோட்டங்கள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே ஏராளமான கிராமங்கள் இருக்கின்றன. இந்த பகுதிகயை பொறுத்தவரை அரசு வழங்கும் போக்குவரத்து வசதிகள் ஒரே வழி. மலைப்பகுதிகள் என்பதால் மிக குறைவாகவே பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது . நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர் ஆகிய நகரங்கள் அமைந்துள்ளன.

இதில் கூடலூர் நகரம் என்பது மைசூர் சாலையில் அமைந்துள்ள பகுதி. இதனை சுற்றி ஏராளமான கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு நாள்தோறும் ஏராளமான அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு வழித்தடங்களில் இயங்கும் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே வரும். அந்த பேருந்துகளுக்காக பொதுமக்கள் நீண்ட நேரம் பேருந்துகளுக்கு காத்திருக்கும் நிலை காலம் காலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கூடலூரில் இருந்து அய்யங்கொல்லி சென்ற அரசு பேருந்து சென்றுள்ளது. அப்போது பெண் பயணி ஒருவர் கையை நீட்டி நிறுத்த முயற்சித்துள்ளார். அப்போது பேருந்து நிற்காமல் சென்றுவிட்டது. இதனிடையே அரசுப் பேருந்து ஓட்டுநர் பன்னீர் என்பவர் பேருந்தை ஓட்டி சென்றார்.

இதனிடையே பின்னர் கைக்குழந்தையுடன் கைகாட்டி நிறுத்திய போது நிற்காமல் சென்றது குறித்து அரசு பேருந்து ஓட்டுரை பார்த்து பெண் பயணி கேள்வி எழுப்பினார். அதற்கு கையை காட்டவே இல்லை என்று டிரைவர் பன்னீர் கூறினார்- அப்போது அந்த பெண் கையை காட்டினேன் நீங்கள் பார்க்கவில்லையா என்று கேட்டார். அப்போது பேருந்தை விட்டு இறங்கிய பன்னீர்.. முறைத்து பார்த்தபடி நின்றதுடன் “இது என்ன உன் அப்பன் வீட்டு வண்டியா?” என ஆவேசமாக கேட்டபடி நகர்ந்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. ஓட்டுநர் பன்னீரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று பலரும் சமூக ஊடகங்களில் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து போக்குவரத்துத்துறை ஓட்டுநர் பன்னீரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. உணர்ச்சி வேகத்தில் பேசிய டிரைவர் பன்னீர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *