உங்களுடைய கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதா..? இந்த விஷயத்தை உடனே பண்ணுங்க!
சாமானிய மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரையில் எல்லோருமே அவரவர் தேவைக்கேற்ப ஏதோ ஒரு வகையில் கடன் பெறுகின்றனர். அவ்வாறு நாம் வங்கிகளில் கடன் பெற முயற்சி செய்யும்போது பல காரணங்களால் நம்முடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்பு உண்டு
பொதுவாக, நாம் ஏற்கனவே பெற்ற கடனை தாமதமாக திரும்பிச் செலுத்தியது குறித்த விவரம் சிபில் ஸ்கோர் மூலமாக தெரிய வருகின்ற தருணங்களில் அல்லது சில அசௌகரியங்கள் காரணமாக நம்முடைய கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
இவ்வாறு கடன் விண்ணப்பம் உங்களுக்கு நிராகரிக்கப்பட்டால், எதிர்காலத்தில் இத்தகைய சிக்கல்களை தவிர்ப்பதற்கு உண்டான காரியங்களை நீங்கள் செய்ய வேண்டும்.
காரணத்தை கண்டறியவும் : உங்களுடைய விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை கண்டறியவும். பொதுவாக வங்கிகளே அந்த காரணத்தை உங்களுக்கு தெரியப்படுத்தி விடும். உதாரணத்திற்கு குறைவான கிரெடிட் ஸ்கோர், போதிய வருமானம் இல்லாமை, முந்தைய கடன் விவரங்கள், முந்தைய கடனை தாமதமாக திருப்பிச் செலுத்தியது, சிக்கலான வேலையில் இருப்பது அல்லது நீங்கள் ஈடு வைத்துள்ள சொத்துக்களில் ஏதேனும் வில்லங்கம் இருப்பது போன்ற காரணங்களால் கடன் நிராகரிக்கப்பட்டிருக்கலாம்.