லிஸ்ட்டில் உங்கள் பெயர் இல்லை.. பொங்கல் பரிசுத்தொகையிலும் பொதுமக்கள் அதிருப்தி..!

பொங்கல் பரிசு தொகைக்கான டோக்கன்கள் தற்போது ரேஷன் கடையில் வழங்கப்பட்டு வரும் நிலையில் பலருக்கு லிஸ்டில் உங்கள் பெயர் இல்லை எனவே உங்களுக்கு பொங்கல் பரிசு கிடைக்காது என்று கூறப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது

ஏற்கனவே வெள்ள நிவாரணத்தொகை இன்னும் பலருக்கு கிடைக்கவில்லை என்றும் லிஸ்டில் பெயர் இல்லை என்ற பதில் தான் வருகிறது என்றும் பொதுமக்கள் குமுறி வரும் நிலையில் பொங்கல் பரிசு தொகை ரூபாய் 1000 ஆவது கிடைக்குமா என்று நினைத்த பலருக்கு ஏமாற்றம் தான் ஏற்பட்டுள்ளது.

இதனால் ரேஷன் கடை ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கத்துக்கு மாறாக தமிழக அரசு இந்த முறை சில நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் அதனால்தான் பொங்கல் பரிசு தொகுப்பு பயனர்கள் பட்டியலில் பலருடைய பெயர் இல்லை என்றும் கூறப்படுகிறது.

வருமான வரி செலுத்துவோர், மத்திய மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருள் இல்லா ரேஷன் அட்டைதாரர்கள் தவிர மற்ற அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில் பலருக்கும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *