உங்கள் ஓய்வூதியம்! உங்கள் உரிமை! – பெண்களே நீங்களே முடிவெடுக்கலாம்!

த்திய அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு அரசால் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
ஓய்வூதியம் பெறுபவர் இறந்துவிட்டால் அவரது கணவரோ/மனைவிக்கோ ஓய்வூதியம் செல்லும். அவர்கள் இல்லையெனில் குழந்தைகளுக்கு செல்லும்.
பெண் ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கை: மத்திய அரசின் துறைகளில் பணியாற்றி ஓய்வூதியம் பெறும் பெண்கள் இறந்துவிட்டால், அவரது கணவருக்கு இந்த ஓய்வூதியம் வழங்கப்படும். ஆனால் இதில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். விவாகரத்து மற்றும் குடும்ப வன்முறையால் பிரிவு போன்ற காரணங்களால் , தங்களது ஓய்வூதியம் கணவருக்கு செல்லாமல் நேரடியாக குழந்தைகளுக்கு செல்ல வேண்டும் என்பது பெண் ஊழியர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அதற்கு சட்டம் இடம் அளிக்கவில்லை.
இனி பெண்களே முடிவெடுக்கலாம்! பாலின சமத்துவத்தை உறுதி செய்தல் மற்றும் திருமண உறவுகள் முறிவதால் ஏற்படும் சவால்களை களையும் நோக்கில், ஓய்வூதிய விதிகளில் திருத்தம் செய்து, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் பெண்கள், தங்களது இறப்புக்கு பிறகு கணவருக்கு பதிலாக தனது குழந்தைகளில் தகுதியான ஒருவருக்கு குடும்ப ஓய்வூதியம் அளிப்பதற்காக அவரை வாரிசுதாரராக நியமனம் செய்யலாம் என அதில் கூறியுள்ளது. குழந்தைகளை வாரிசாக நியமிப்பது எப்படி?: மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையில் அதற்கான வழிகாட்டியும் இடம்பெற்றுள்ளது.
தனக்கு பிறகு தனது கணவருக்கு அல்லாமல் குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் செல்ல வேண்டும் என நினைக்கும் மத்திய அரசு பெண் ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள், இது குறித்து தங்களின் அரசு துறைத் தலைவரிடம் எழுத்து மூலமாக எழுதித் தர வேண்டும். அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் உங்கள் கோரிக்கையானது நிறைவேற்றப்படும். யாரெல்லாம் பயன்படுத்தலாம்: மத்திய அரசின் இந்த அறிவிப்பை அனைத்து பெண் ஊழியர்களும்/ஓய்வூதியதாரர்களும் பயன்படுத்தி கொள்ளலாம். குறிப்பாக விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் பெண் ஊழியர்கள், கணவருக்கு எதிராக வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு தொடர்ந்த அரசு பெண் ஊழியர்கள் ஆகியோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *