ஆரஞ்சு பழத்தில் இருக்கு உங்கள் எடை இழப்பு ரகசியம்: இப்படி சாப்பிடுங்க

அவற்றில் பழங்களை ஒட்கொள்வதும் ஒன்று. பல பழங்களை உட்கொள்வது எடை இழப்புக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. பழங்களில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, எனவே அவற்றை உகொள்வது எடை குறைக்க உதவுகிறது. பழங்களில், ஆரஞ்சு எடை இழப்புக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இதில் காணப்படும் பல சத்துக்களால் இது விரைவாக உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆனால் இதற்கு ஆரஞ்சுகளை சரியான முறையில் உட்கொள்வது அவசியம். உடல் எடையை குறைக்க ஆரஞ்சு பழத்தை எப்படி உட்கொள்வது என்பதை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்வோம்.

எடை இழப்புக்கு ஆரஞ்சு ஏன் பயனுள்ளதாக இருக்கும்?

ஆரஞ்சு பழத்தில் கலோரிகள் குறைவாக (Low Calorie) இருப்பதால், உடல் எடையை குறைக்க இது ஒரு சிறந்த வழி. வைட்டமின்களுடன், இதில் அதிக அளவு நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் கால்சியம் உள்ளது. இதன் காரணமாக அதை உட்கொள்வது எடை இழப்புக்கு உதவும்.

உடல் எடையை குறைக்க ஆரஞ்சு பழத்தை உட்கொள்ளும் வழிகள் (How To Consume Orange To Lose Weight)

ஆரஞ்சு மற்றும் மஞ்சள் ஷாட்ஸ்

ஆரஞ்சு மற்றும் மஞ்சள் ஷாட்கள் உடல் எடையை குறைக்க உதவும். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் ஷாட்கள் செய்ய, மஞ்சள், இஞ்சி, ஆரஞ்சு ஆகியவற்றை மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதிலிருந்து தயாரிக்கப்பட்ட சாற்றை ஒரு நாளைக்கு 1 முதல் 2 முறை எடுத்துக் கொள்ளலாம். ஆரஞ்சு பழத்தில் உள்ள நார்ச்சத்து பசியைக் கட்டுப்படுத்தவும், எடையைக் குறைக்கவும், தொப்பை கொழுப்பை குறைக்கவும் (Belly Fat) உதவும். இஞ்சியை உட்கொள்வதும் உணவுப் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

ஆரஞ்சு சாறு குடிக்கவும்

ஆரஞ்சு சாற்றை (Orange Juice) உணவில் சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் காலை உணவு அல்லது சிற்றுண்டி நேரத்தில் இதை குடிக்கலாம். ஆரஞ்சு பழச்சாறு உட்கொள்வதன் மூலம், உங்கள் பசி கட்டுப்படுத்தப்படும் மற்றும் நீண்ட நேரம் பசியை உணராமல் இருக்கலாம். இதன் மூலம் குறைவான கலோரிகளை உட்கொண்டும் நாம் நிறைவாக உணரலாம். இதனுடன், ஆரஞ்சு உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகிறது. இது எடை இழப்புக்கு உதவுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *