100 அடி ஆழம் கிணற்றில் விழுந்து இளைஞர் பலி.. புறா பிடிக்க சென்ற போது சோகம்… !

இவர்கள் இருவரும் விடுமுறை நாட்களில் கிணறுகளுக்கு சென்று அங்குள்ள புறாக்களை பிடிப்பதை இருவரும் வாடிக்கையாக வைத்திருந்தனர். அதே போல் நேற்றும் மலையாம்பட்டி அருகே வீரன் என்பவருடைய கிணற்றில் புறா பிடிக்க சென்றனர். இந்த கிணறு 100 அடி ஆழம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கு புறாவைப் பிடிக்க வலை விரிக்கும் பணி செய்து கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி வரதராஜ் கிணற்றில் விழுந்தார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நண்பன் கிணற்றில் விழுந்ததைக் கண்ட ராஜி கூச்சலிட்டு கதறி அழுதார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ராசிபுரம் தீயணைப்புத்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி உயிரிழந்த வரதராஜின் சடலத்தை மீட்டனர். சடலத்தை காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புறா பிடிக்க சென்றபோது நிலை தடுமாறி கிணற்றில் விழுந்து இளைஞர் உயிரிழந்த செய்தி அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *