செம்ம சுவையான பால்கோவா ரெசிபி: இப்படி செய்யுங்க
வாயில் கரையும் பால்கோவா ரெசிபி. ஒரு முறை செய்து பாருங்க.
வாயில் கரையும் பால்கோவா ரெசிபி. ஒரு முறை செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
பால் – 1 லிட்டர்
நெய் – 8 ஸ்பூன்
சர்க்கரை – ½ கப்
செய்முறை: அடுப்பில் கடாய் வைத்து, பால் ஊற்றி கொதிக்க விடவும். முழு கிரீம் பாலாக இருந்தால் இன்னும் நல்லது. பால் சீக்கிரமே கெட்டியாகி விடும்.
பால் சூடாகி, பாலாடை வரவும் ஒரு மரக்கரண்டி வைத்து கிளறிக் கொடுக்கவும், பாத்திரத்தின் ஓரங்களில் ஓட்டியிருக்கும் பாலாடையை, எடுத்து விடவும். பால்கோவா செய்யும் போது எப்போதும் கிளறிக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்யும் போதுதான் அடிபிடிக்காமல், கன்சிஸ்டன்சி சரியாக கிடைக்கும்.
ஒரு லிட்டர் பால் முக்கால் லிட்டர் ஆகும் வரை, தீயை ஹை ஃபிளேமில் வைத்து இப்படி கிளறிக் கொண்டே இருங்கள். பால் முக்கால் லிட்டர் வந்ததும், அதில் ½ கப் சர்க்கரை சேர்த்து, மிதமான தீயில் நன்கு மிக்ஸ் செய்யவும். பால் திக் ஆகி வரவும் அதில் சிறிது நெய் சேர்க்கவும்.
முதலில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கிளறவும். அது மிக்ஸாகி நன்கு கொதித்து வரவும், பாலில் 3 ஸ்பூன் நெய் சேர்க்கவும். இனி சீக்கிரமே கெட்டியாகிவிடும். பால் கொஞ்சம் திக் ஆனதும், மீண்டும் தேவையான அளவு நெய் சேர்த்து கிளறவும். சிறிது நேரத்தில் கெட்டியான, சுவையான பால்கோவா தயாராகி விடும்.