Yuvina Parthavi:பொங்கல் பானையுடன் போஸ் கொடுத்த சூர்யாவின் ரீல் மகள்.. அட இவ்வளவு வளர்ந்துட்டாங்களே!!

தமிழில் அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து சிறுமியாக நடித்தவர் யுவினா பார்த்தவி. தமிழில் மட்டுமில்லாமல் கன்னடத்திலும் சில படங்களில் நடித்துள்ள யுவினா, சின்னத்திரை தொடர்களிலும் நடித்து எராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தமிழில் அஜித், தமன்னா லீட் கேரக்டர்களில் நடித்திருந்த வீரம் படத்தில் நாசரின் பேத்தியாக நடித்தவர் யுவினா. அஜித் மற்றும் யுவினா இடையிலான காம்பினேஷன் காட்சிகள், படத்தில் சிறப்பாக அமைந்திருந்தன. ஆக்ஷன் காட்சிகளிலும் தன்னுடைய அப்பாவித்தனமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் யுவினா.
தொடர்ந்து மஞ்சப்பை, அரண்மனை, கத்தி போன்ற படங்களில் நடித்துள்ள யுவினா பார்த்தவி, முன்னதாக நடிகர் சூர்யாவுடன் மாசு என்கிற மாசிலாமணி என்ற படத்தில் மகளாக நடித்திருந்தார். படத்தில் சிறிது நேரமே வந்திருந்தாலும் இவரது காட்சிகள் சிறப்பாக அமைந்தன. விஜய்யுடனும் சர்க்கார் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ள யுவினா பார்த்தவி, தற்போது நன்றாக வளர்ந்துவிட்டார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் யுவினாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
நடிகை யுவினா பார்த்தவி: விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் சிறுமியாக நடித்துள்ளவர் யுவினா பார்த்தவி. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னட மொழிகளிலும் சில படங்களில் சிறுமியாக நடித்துள்ள யுவினா, முன்னதாக சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர். அஜித்துடன் வீரம் படத்தில் நடித்ததன்மூலம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தவர் யுவினா. இந்தப் படத்தில் நாசரின் பேத்தியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். படத்தில் அஜித் மற்றும் யுவினா பார்த்தவியின் காம்பினேஷன் காட்சிகள், யுவினாவை காப்பாற்றுவதற்காக அஜித் வில்லன்களுடன் மோதும் காட்சிகள் போன்றவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன.
அடுத்தடுத்த படங்கள்: இதேபோல மாசு என்கிற மாசிலாமணி, மஞ்சப்பை, அரண்மனை, சர்க்கார், கத்தி போன்ற படங்களும் யுவினா சிறுமியாக நடித்து வெளியான படங்கள். இவை யுவினாவின் கேரியரில் பெஸ்ட்டாக அமைந்தவை. குறிப்பாக மாசு என்கிற மாசிலாமணி படத்தில் சூர்யாவின் மகளாக நடித்து, சிறிது நேரத்திலேயே உயிரிழக்கும் கேரக்டரில் நடித்து ஏராளமான ரசிகர்களின் பரிதாபத்திற்கு உரியவரானார் யுவினா. சிறுமியாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்த யுவினா, தன்னுடைய படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக சினிமாவில் நடிக்காமல் விலகியுள்ளார்.
வளர்ந்துவிட்ட யுவினா: இந்நிலையில் யுவினா தற்போது நன்றாக வளர்ந்துவிட்டார். தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி யுவினா மேற்கொண்ட கொண்டாட்டங்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன. பொங்கல் பானையின் முன்பு அவர் பாவடை தாவணியில் கொடுத்துள்ள போஸ் மிகவும் சிறப்பாக ஏராளமான ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளது. மேலும் பொங்கல் கொண்டாட்டங்களின் வீடியோக்களையும் பகிர்ந்துள்ள யுவினா, பொங்கல் வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார்.
https://www.instagram.com/p/C2G7fxbxa_i/?utm_source=ig_web_copy_link
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்: இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் யுவினா பார்த்தவி. முன்னதாக கடந்த 2011ம் ஆண்டில் உறவுக்கு கை கொடுப்போம் சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கினார் யுவினா. தொடர்ந்து விக்ரம் பிரபுவின் இவன் வேற மாதிரி படத்தின்மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்த ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறார் யுவினா. இதை பார்க்கும் ரசிகர்கள், அனிகாவை தொடர்ந்து அடுத்து ஹீரோயின் ரெடி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.