5 லட்சம் டெலிவரி ஏஜெட்களுக்கு ப்ளூடூத் ஹெல்மெட் வழங்கும் ஜொமேட்டோ!

உணவு விநியோக செயலியான ஜொமேட்டோ (Zomato) தனது 3 லட்சம் டெலிவரி பார்ட்னர்களுக்கு புளூடூத் மூலம் ஹெல்மெட்களை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இது குறித்து ஜொமேட்டோ உணவு டெலிவரியின் தலைமை நிர்வாக அதிகாரி ராகேஷ் ரஞ்சன் கூறுகையில், “கடந்த சில மாதங்களில் 10,000 டெலிவரி பார்ட்னர்கள் எந்த அவசரநிலையிலும் உதவ தொழில்முறை பயிற்சியைப் பெற்றிருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இன்று டெலிவரி பார்ட்னர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிபடுத்த அவர்களுக்கு புளூடூத் வசதியுடன் ஹெல்மெட்களை விநியோகம் செய்ய முடிவு செய்திருக்கிறோம்” என்று கூறினார்.

டெலிவரி பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருவரின் நலனையும் உறுதி செய்வதற்கான புதுமையான வழிகளை ஆராய்வதில் ஜொமேட்டோ நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது என்றும் ரஞ்சன் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் ஹெல்மெட் அதிநவீன செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறது. டெலிவரி பார்ட்னர்கள் ஹெல்மெட்டை ஆன் செய்து, அப்ளிகேஷனுடன் இணைத்து பாதுகாப்பாக அணிய வேண்டும். ஹெல்மெட்டிற்குள் இருக்கும் சென்சார் தொழில்நுட்பம் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. இந்தப் புதுமையான அமைப்பு பணியாளர்களின் செயல்பாட்டுத் திறனையும் மேம்படுத்துகிறது என ஜொமேட்டோ கூறுகிறது.

2023 நிதியாண்டிலும், டெலிவரி பார்ட்னர்களுக்கு 250,000 க்கும் மேற்பட்ட அணியக்கூடிய பொருட்களை வழங்கியதாக ஜொமேட்டோ நிறுவனம் கூறியுள்ளது. இரவு நேரத்தில் அணிவதற்கான ஜாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கியுள்ளது. பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு காப்பீட்டுத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜோமேட்டோ தனது டெலிவரி ஏஜெண்ட்களை அதிரிக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. அதன்படி 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை தனது வேலையில் சேர்த்துக்கொண்டிருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் 2,000 பெண்களுக்கும் வாய்ப்ப அளித்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *