அமெரிக்காவில் பரவும் ‘ஜாம்பி மான் நோய்’ – இதன் அறிகுறிகள் என்ன? மனிதர்களுக்கு பரவுமா? எவ்வளவு ஆபத்தானது?
Zombie Deer Disease In Tamil: தற்போது கொரோனாவின் JN.1 மாறுபாடு உலகெங்கிலும் பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வடமெரிக்காவின் வனப்பகுதியில் ஒரு மோசமான மற்றும் மர்மமான நோய் அமைதியாக பரவிக் கொண்டிருக்கிறது. அது ஜாம்பி மான் நோய் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய்த்தொற்றின் வழக்குகள் அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளிலும்
வட அமெரிக்கா முழுவதும் உள்ள வனவிலங்குகளிடையே பரவி வரும் நாள்பட்ட கழிவு நோய் (CWD) மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ‘ஜாம்பி மான் நோய்’ என்றும் அழைக்கப்படும், இந்த நோய் விலங்குகளின் மனநிலையை குழப்பி, ஜொள்ளுவிட வைக்கும். இந்த நோய் முதன் முதலான நவம்பர் மாதம் யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த நோயானது அமெரிக்காவில் உள்ள மான், எல்க் மற்றும் மூஸ் ஆகியவற்றின் 800 மாதிரிகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் CDC-யின் படி, இந்த வைரஸ் 33 மாநிலங்கள் மற்றும் கனடாவின் 4 மாகாணங்களில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அதோடு இந்த வைரஸ் தொற்று குறித்த எச்சரிக்கையும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
ஜாம்பி மான் நோய் என்றால் என்ன? ஜாம்பி மான் நோய், நாள்பட்ட கழிவு நோய் (Chronic Wasting Disease) என்னும் அழைக்கப்படுகிறது. இது மான், எல்க் மற்றும் மூஸ் ஆகியவற்றின் மூளையை குறிவைத்து, கடுமையான நரம்பியல் பாதிப்பை ஏற்படுத்தும் மோசமான நோயாகும். இந்நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் வாயில் இருந்து எச்சில் வழிவதோடு, விலங்குகள் குழப்பத்துடன் இருக்கும் மற்றும் மனிதர்களைக் கண்டால் பயம் இல்லாமலும் இருக்கும்.
தற்போது இந்நோய் எங்கெல்லாம் உள்ளது? சிடிசியின் கூற்றுப்படி, இந்த நோய் அமெரிக்காவின் 33 மாநிலங்களிலும், கனடாவின் 4 மாகாணங்களிலும் உள்ளது. பின்லாந்து மற்றும் தென் கொரியாவிலும் வழக்குகள் பதிவாகியுள்ளன. 1960-களின் பிற்பகுதியில் கொலராடோவில் நாள்பட்ட கழிவு நோய் முதன்முதலில் பதிவாகியது. அப்போதிருந்து, இந்த நோய் மத்திய மேற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்கு கடற்கரையில் உள்ள மாநிலங்களில் உள்ளது. மேலும் இன்னும் அறியாத இன்னும் பல வழக்குகளும் இருக்கலாம்.